sireku

உதயனை யானை போட்ட கல்நெருக்கம்


தம்பலகாமம் என்னும் பெயர் புராதனமானது. அது ஏறக்குறைய 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சாசன வழக்கில் இருந்ததை  தம்பலகாமம் கல்வெட்டு மூலம் அறிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.


கந்தளாய் ,கொட்டியாரம்,கட்டுக்குளப்பற்று, பதவியா, மன்னார் மாதோட்டம் , புலச்சேரி, தேவபட்டினம் முதலிய இடங்களில் கலிங்கத்து மாகோன் தனது படை நிலைகளை அமைத்திருந்தான் எனப் பாளி,சிங்கள வரலாற்று நூல்கள் சொல்கின்றன.

 ‘தம்பன் கோட்டை’ என இன்றும் அழைக்கப்பட்டு வரும் இடம் பழமையில் சிறிய கோட்டையாக இருந்ததாகவும் இக் கோட்டையைச் சுற்றி அகழிகள் இருந்ததாகவும் காலப்போக்கில் இவையெல்லாம் சிதைந்து அழிவுற்றுவிட்டன என்றும் தம்பலகாமத்தைச் சேர்ந்த வயதில் முதிந்தோர்கூறுகின்றனர்.

‘தம்பன்’ என்ற கலிங்கப்படைத் தளபதி இக்கோட்டையின் தளபதியாக இருந்ததாகவும் இவன் கிழக்கிலங்கையில் மாகனுக்கெதிராகச் செயல்பட்டோரை  ‘தம்பன் கடவை’ வரையில் கலைத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. ‘தம்பன் கடவை’ என்பது பொலனறுவை ஊடாக மட்டக்களப்புக்குச் செல்லும் பாதையில் ‘மன்னம்பிட்டிக்கு’ அருகாண்மையில் அமைந்துள்ள பகுதியாகும்.

உதயனை யானை போட்ட கல்நெருக்கம்
இக்காலப்பகுதியில் குதிரைப்படைக்குத் தலைமைதாங்கிச் சென்ற இரத்தினாவதி தேவியின் மகனான உதயகுமாரனும் படைகளும் கந்தளாயில் இருந்து தம்பன் கோட்டைக்குத் திரும்பி வரும் போது உதயகுமாரனை கல்நெருக்கம் என்ற இடத்திலேயே யானை தாக்கியது. கல்நெருக்கம் என்ற இடம் தம்பலகாமத்துக்கும் கந்தளாய்க்கும் இடையே உள்ள வயல்பகுதியில் இருக்கிறது.

இந்த வரலாற்றாதாரம்தான் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்களின் ரங்கநாயகியின் காதலன் என்னும் குறுநாவலின் அடிப்படை என்பது இங்கு குறிப்பிடத்தக்தாககும்.

நன்றி: ஜிவநதி.


0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...