sireku


தமக்கு தொழில் வாய்ப்பினை வழங்குமாறு கோரி, திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை  மாவட்டத்தில் உள்ள கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக  இன்று  வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்  இதில் சுமார் 100 இற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.

பட்டப்படிப்பினை முடித்தும் வேலையற்ற நிலையில், தாம் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக தெரிவித்த வேலையற்ற பட்டதாரிகள், தமது நிலையை கருத்திற்கொண்டு அரசாங்கம் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் தரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள்      கிண்ணியா  பிரதேச செயலாளரிடமும் , பிரதேச அரசியல் பிரமுகர்களிடமும்  கையளிக்கப்பட்டது.

 தமது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில், தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆர்ப்பாட்டகாரர்கள் குறிப்பிட்டனர்.









0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...