தம்பலகம முஸ்லீம் காங்ரஸ் மத்தியகுழுவிற்க்கு முள்ளிப்பொத்தானையில் இருந்து தலைமைதுவம் !!..
ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்ரஸ் தம்பலகம பிரதேச மத்தியகுழு தலைவராக எம்.எஸ்.நஸீர்கான் 2016.03.05ம் திகதி கட்சியினால் தெரிவு செய்யப்பட்டார்.
இவர்ஆரம்பக்கல்வி தி/அல் ஹிஜ்ரா மத்திய மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை தி/கிண்ணியா மத்திய கல்லூரியிலும் கற்று முகாமைத்துவ பீடத்திற்கு தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி 2007 ம் ஆண்டு அப்பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்த இவர் தற்பொழுது தம்பலகம பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வருகிறார்.
பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை சமூக நோக்கும் தூரநோக்கு சிந்தனையும் சிறந்த தலைமைத்துவப் பண்புகளையும் கொண்ட இவர் மக்களின் உளவியல் ரீதியான பிரட்சிணைகளுக்கு counsellor என்ற வகையில் பணம் எடுக்காமல் இலவசமாகவும் சேவை செய்து வருகிறார்.
0 Comments