sireku
முள்ளிப்பொத்தானையிலும்,முள்ளிப்பொத்தானையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்இன்று திடீரென கணமழை பெய்தது.

திடீரென துவங்கிய மழை சுமார் 18 மணி நேரத்திற்கும் மேல் கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் முள்ளிப்பொத்தானை மிதக்கின்றது.

 திடீரென்று கொட்டிய இப்பேய்மழையால் மக்களின் வயல் நிலங்கள்,வீடுகள் நீரில் மூழ்கியது.வீதிகள் ஆறுகளாய் மாறியுள்ளது. மக்கள் உயரமான பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டு உள்ளார்கள்.

திடீரென மேகம் திரண்டு கொட்டிய மழை இன்னும் ஓயவில்லை வானம் இருண்டு குளிர் காற்றுடன் மழை தொடர்கிறது. பரவிபாஞ்சான் குளம் நிரம்பியுள்ளது இதனால் புஹாரி நகர் பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது, கல்மெட்டியா குளம் நிரம்பி வழிவதால் 96ம் கட்டைப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

 ஆறுகள்  குளங்கள் நிரம்பிய நிலையில் தொடர்ந்து மழை பெய்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.







0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...