மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நாளை முதல்சாகும்வரையிலான உண்ணாவிரதம்
sireku
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நாளை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் அமைப்பின் தலைவர் உதயவேந்தன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற பட்டதாரிகள் சங்க கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து லங்காசிறி இணையத்திற்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
;
நாங்கள் பல தடவைகள் பல்வேறு கோரிக்கைகள் மற்று போராட்டங்களை நடாத்தியபோதும் எமக்கான வேலை வாய்ப்பினை வழங்குவதற்கு மத்திய அரசும், மாகாணஅரசும் இழுத்தடிப்புச் செய்துவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1400 பட்டதாரிகள் உள்ளனர் அவர்கள் கடந்த பல வருடங்களாக வேலைவாய்ப்பின்றி மிகுந்த கஸ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மத்திய ,மாகாண அரசாங்கங்கள் தொடர்ந்தும் எமது கோரிக்கைகளை புறக்கணித்து வருகின்றனர்.
இதன் காரணத்தினால் இன்றைய தினம்(06.10.2015) நடைபெற்ற பட்டதாரிகள் சங்க கூட்டத்தில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.
அதாவது 35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கள், உடனடியாக மகாண முதலமைச்சர் மற்றும் மத்திய அரசாங்கம் என்பன தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு எமது பட்டதாரிகளை நியமிக்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து நாளைய தினம் முதல் மட்டக்களப்பு காந்திபூங்காவில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
குறித்த போராட்டமானது எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை தொடர்ந்து அம்பாறை மாவட்ட பட்டதாரிகளுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தின் அனைத்து பிரதேசங்களிலும் உண்ணா விரதப் போராட்டங்களை முன்னெடுப் போமெனவும் கூறினார்.
நன்றி லங்காசிறி.
0 Comments