மஹிந்தவைக் கவிழ்த்தது வைபர்தானாம் மனம் திறக்கும் சந்திரிக்கா!!
sireku
இரும்பு மனிதனாக அறியப்பட்ட மஹிந்த ராஜபக்ச சற்றும் எதிர்பாராத வகையில் அவரது கட்சிச் செயலாளர் மைத்ரிபால சிறிசேனவே பொது வேட்பாளராக அறிமுகமாகியதும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை அவரது பதவிக் காலத்திலேயே தோற்கடித்த வரலாறும் ஏற்கனவே அனைவரும் அறிந்த விடயங்களாகும்.
பொது வேட்பாளர் அறிமுக நாளன்றே இதன் பின்னணியில் சந்திரிக்காவின் பங்கு குறித்து நாடு அறிந்து கொண்ட நிலையில் தேர்தலில் தனக்கும் சந்திரிக்காவுக்குமே போட்டியென பகிரங்கமாகவே தனது ஆதங்கத்தை வெளியிட்டிருந்தார் மஹிந்த ராஜபக்ச.
ஸ்ரீலசுகட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் சந்திரிக்காவோடு பேச அனுமதிக்காது பலமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டிருந்த மஹிந்த, சந்திரிக்காவை முழுமையாகத் தனிமைப்படுத்தியிருந்தார்.
ஒரு முன்னாள் ஜனாதிபதிக்குரிய சலுகைகளும் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் தன்னால் அனுமதியளிக்கப்பட்டு பதவிக்கு வந்த மஹிந்த அதிகார துஷ்பிரயோகத்தில் நாட்டை நாசமாக்குவது குறித்து தொடர் கவலையில் தான் இருந்து வந்ததாகவும் 2010ம் ஆண்டின் பின்னாவது முன்னேற்றம் வரும் என்று காத்திருந்தும் ஏமாற்றமடைந்த நிலையிலேயே தானும் களத்தில் இறங்கியதாகவும் இந்திய ஊடகவியலாளர் மத்தியில் விளக்கமளித்த சந்திரிக்கா, மஹிந்தவின் பதவி கவிழ்ப்புக்குப் பின்னால் எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் இருக்கவில்லையென தெரிவித்துள்ளார்.
இதன் பின்னணியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மைத்ரி உட்பட ஏனையோருடனான பேச்சுவார்த்தைகள் எவ்வாறு இடம்பெற்றது எனும் கேள்விக்கும் பதிலளித்த அவர், தமது அனைத்து கலந்துரையாடல்களும் வைபர் ஊடாகவே இடம்பெற்றதாகவும், அப்போது வைபர் ஊடான கலந்துரையாடல்களைக் கண்டறியும், துப்பறியும் தொழிநுட்பம் இலங்கையில் இருக்கவில்லையெனவும் தெளிவுபடுத்தியுள்ள அவர், அவ்வாறு இருந்திருந்தால் இந்நேரம் தாம் எல்லோரும் கொல்லப்பட்டிருப்போம் என தெரிவித்தார்.
கடந்த வருட இறுதியில் பொது எதிரணி மத்தியில் வெளியில் கசியாமல் மிக இரகசியமாக பேச்சுவார்த்தைகள் நடந்தது எப்படி என பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையிலேயே கடிதமோ, மின்னஞ்சலோ, நேரடி சந்திப்புகளையோ தவிர்த்து தாம் இவ்வாறே தொடர்பு கொண்டதாகவும் எந்த வெளிநாட்டு சக்திகளும் இடையில் இல்லையெனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற மஹிந்த ராஜபக்ச, கடந்த தேர்தலில் பிரதமர் பதவியையும் அடைய முடியாது சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் அரசியலில் இருப்பதும், தமது ஓய்வின் பின் வேறு எந்த பதவியிலும் அமரப் போவதில்லையென சந்திரிக்கா அரசியலில் இருந்து ஒதுங்கியே இருப்பதும் தற்போது இனங்களுக்கிடையிலான நல்லிணக்க செயற்பாட்டு விடயத்தில் தனது பங்களிப்பை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
www.sonakar.com

0 Comments