இன்று அரிய சந்திர கிரகணம் !!
sireku
முழுமையான அரிய சந்திரகிரகணமொன்றை இன்று இலங்கையில் அவதானிக்கக் கூடியதாகவிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் கிரகணத்தை அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் கிழக்கு பசுபிக் பிராந்தியங்களிலுள்ள மக்கள் அவதானிக்க முடியும் என வானியல் அவதான நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் இந்த சந்திர கிரகணத்தை இன்று அதிகாலை 5.41 மணியிலிருந்து காலை 10.52 மணி வரை அவதானிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. மேற்படி சந்திரகிரகணம் 5 மணித்தியாலம் 11 நிமிடங்களுக்கு நீடிக்கவுள்ளது.
அமெரிக்கா, கனடா, மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இந்த சந்திர கிரகணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், ஐரோப்பா, தென் மற்றும் கிழக்கு ஆசியா, ஆபிரிக்கா, ஆர்ட்டிக் பிராந்தியம், பசுபிக், அத்திலாந்திக் மற்றும் இந்து சமுத்திர பிராந்தியங்களில் இன்று நள்ளிரவு முதல் இந்த சந்திர கிரகணம் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை சந்திர கிரகணத்தின் போது தோன்றும் சூப்பர் சிவப்பு சந்திரனானது வழமையான சந்திரனை விடவும் பெரிதாக செந்நிற ஔியுடன் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.
இந்நிலையில் இந்த சந்திர கிரகணம் தோன்றும் பிராந்தியங்களிலுள்ள மக்கள் அந்த சிவப்பு நிற சந்திரனை நிழல் விழுங்குவதை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
1900 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இத்தகைய சந்திர கிரகணங்கள் 5 மட்டுமே இடம்பெற்றுள்ளன.இதற்கு முன் 1982 ஆம் ஆண்டிலேயே இத்தகைய சிவப்பு நிற சூப்பர் சந்திரன் தோன்றும் கிரகணம் இடம்பெற்றிருந்தது.
அந்த வகையில் கடந்த 33 வருட காலத்திற்குள் பிறந்தவர்களுக்கு முதல் தடவையாக இத்தகைய அரிய சந்திர கிரகணத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்திரனுக்கும் சூரியனுக்குமிடையில் பூமி வருகையில் இந்த அரிய சந்திர கிரகணம் ஏற்படுகின்றது. இதன்போது சூரிய ஔி சந்திரனை நேரடியாக அடையாது பூமியின் வளிமண்டலத்தினூடாக வளைந்து சந்திரனின் மேற்பரப்பை அடைகிறது. இதன் காரணமாக சந்திரன் சிவப்பு நிறத்தில் ஔிர்கிறது.
எதிர்வரும் 2033 ஆம் ஆண்டு வரை இத்தகைய அரிய சந்திர கிரகணமொன்று ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கூறுகிறது.
|
0 Comments