sireku
மலர்ந்துள்ள இப்புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் சமூக ஒற்றுமை மேலோங்க அனைவரும் பிரார்த்திப்போம் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் புனித ஹஜ் கடமைக்காக மக்கா நகர் சென்ற ஹாஜிகள் அறபா மைதானத்தில் ஒன்று கூடினர். அதேபோல முஸ்தலிபாää மினா போன்ற தளங்களிலும் ஒன்றாகவே இருக்கின்றனர். இங்கு கருப்பர் – வெள்ளையர்ää உயர்ந்தோர் – தாழ்ந்தோர்ää ஏழை – பணக்காரன் என்ற எவ்வித வேறுபாடுகளும் இன்றி ஒற்றுமையோடு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

இந்த முன்மாதிரியை நாம் நமது வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டும். அண்மைக்காலத்தில் தேர்தலொன்றை சந்தித்துள்ளதால் நமக்குள் கட்சி ரீதியானää தனிநபர் ரீதியான மனக் கசப்புகள் ஏற்பட்டிருக்கலாம். சுpல வேளை பிளவுகளும் ஏற்பட்டிருக்கலாம். இவை களையப்பட வேண்டும். சமூக நலன் கருதி ஒற்றுமையைப் பலப் படுத்த வேண்டும்.

இதன் மூலம் நம்முடையதும்ää எதிர்கால சந்ததியினரதும் நலன்களைப் பாதுகாக்க முடியும். எனவேää சமூகத்தின் ஒற்றுமைக்காக நாம் அனைவரும் இப்புனித நந்நாளில் பிரார்த்திப்போம்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...