sireku
இனவாதம் மதவாதம் என்பவற்றைப் பேசி இன்னும் இந்நாட்டை குட்டிச் சுவராக்கும் நிலையை அனுமதிக்க முடியாது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்  நேற்று பாராளுமன்றத்தில் தனது கன்னி உரையில் தெரிவித்தார்
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:
இந்த உயரிய சபையில் இன்று கன்னி உரையாற்றக் கிடைத்த சந்தர்ப்பத்தை பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன். இந்த உயரிய சபையின் ஒரு அங்கத்தவனாக வருவதற்கு எனக்கு வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்ததாக பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் எனக்கு வாக்களித்த திருகோணமலை மாவட்ட மக்களை நன்றியுடன் நான் நினைவு கூறுகின்றேன்.
ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக வர வேண்டுமாயின்; வேட்பாளராக தெரிவு செய்யப்பட வேண்டும். அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு வேட்பாளனாக என்னைத் தெரிவு செய்த எமது கட்சியின் தலைவர் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைச் சமர்ப்பிக்கிறேன்.

இன்றைய நாள் எனது வாழ்வில் மிக முக்கியமான நாள். எனது தந்தை துறைமுகங்கள்ää கப்பற்றுறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் மர்ஹ_ம் எம்.ஈ.எச்.மகரூப் அவர்கள் 1977 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கொல்லப்படும் வரை 20 வருடங்கள் தொடர்ச்சியாக இந்த உயரிய சபையின் உறுப்பினராக இருந்துள்ளார்.
அவர்களை இச்சந்தர்ப்பத்தில் ஞாபகப் படுத்திக் கொள்வதோடு அவர்களின் வழியைப் பின்பற்றி மக்களுக்கு உச்சக் கட்ட சேவை செய்ய என்னை நான் தயார் படுத்திக் கொள்கிறேன்.

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. எனினும்ää அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது சம்பந்தமான தீர்மானத்தை பாராளுமன்றம் வழங்க வேண்டும் என்ற ஒரு நியதி இருப்பதால் இன்று இந்த விவாதம் சபைக்கு வந்துள்ளது.
கடந்த 30 வருடங்களாக நமது நாடு பயங்கரவாதம்ää இனவாதம் போன்ற கொடிய நோய்களுக்குள் வீழ்ந்து கிடந்தது. மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு சுந்திரமாக பேசவோää நடமாடவோ முடியாத சூழ்நிலை உருவாகியிருந்தது. உயிருக்கு உத்தரவாதமில்லா நிலை இருந்தது. சிலர் இந்நாட்டில் வாழமுடியாத நிலை இருந்ததால் வேறு நாடுகளில் தஞ்சமடைந்தனர். ஜனநாயகம்ää சுதந்திரம்ää நல்லாட்சி என்பற்றுக்காக மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

இப்படியான சூழ்நிலையில் தான் ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் வந்தது. தமக்கு ஜனநாயகம்ää நல்லாட்சிää சுதந்திரம் என்பன கிடைக்க வேண்டுமென்பதற்காக மக்கள் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவைத் தெரிவு செய்தார்கள். அதன் அடிப்படையில் இப்போது புதிய அரசாங்கத்தையும் தெரிவு செய்துள்ளார்கள்.
எனவேää மக்கள் எதிர்பார்க்கின்ற ஜனநாயகம்ää நல்லாட்சிää சுதந்திரம் என்பவற்றை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கவேண்டிய கடமை நமக்கு உள்ளது. இந்த நாட்டில் வேரூன்றியுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டியுள்ளது. ஒரே நாட்டிலே பிறந்து வாழ்ந்து வந்தாலும் அடுத்த சமூகத்தை சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலையை மாற்றியமைக்க வேண்டியுள்ளது
.
இனவாதம்ää மதவாதம் என்பவற்றைப் பேசி இன்னும் இந்நாட்டை குட்டிச் சுவராக்கும் நிலையை அனுமதிக்க முடியாது. ஊழல்ää துஸ்பிரயோகங்களை ஒழிக்க வேண்டியுள்ளது. போதைப் பொருளற்ற தூய்மையான ஒரு நாட்டை நமது எதிர் காலச் சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டியுள்ளது.

அதற்காகத் தான்கட்சி வேறுபாடுகள் இன்றி தேசிய அரசாங்கம் என்ற அடிப்படையில் நாம் இச்சபையில் ஒன்றிணைந்துள்ளோம். எனவேää இந்த தேசிய அரசாங்கத்தில் ஒன்றிணைந்துள்ள எல்லாக்கட்சிகளையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற வகையில் அமைச்சரவை அமைய வேண்டிய அவசியம் உள்ளது.

அப்போதுதான் எல்லாக்கட்சிகளது கருத்துக்களையும் உள்வாங்கி பொதுவான தீர்மானங்களுக்கு வர முடியும். இது நாட்டின் எதிர்கால நலனுக்கும்ää நிலையான அபிவிருத்திக்கும் அடித்தளமாக அமையும்.

அதற்காக அமைச்சர்கள் நியமனத்தில் உள்ள எண்ணிக்கை சம்பந்தமான மட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டியுள்ளது. தேவையான அளவு அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளது. இது நாட்டு நலன் கருதி மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
இலங்கை சுதந்திரமடைந்த பின்பு முதற்தடவையாக இந்த ஆண்டு தான் திருகோணமலை மாவட்ட மக்கள் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரை தமது மாவட்டத்தில் பெற்றார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணைந்து ஜனவரி 8ஆம் திகதி எற்படுத்திய அரசாங்கத்தில் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன அந்த அதி~;டத்தைப் பெற்றார்.
இது போல தேவையான மாவட்டங்களுக்குää தேவையான துறைக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டிய தேவை இருப்பதால் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டியது அவசியம் என்

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...