sireku
சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள அல் ஹரம் மசூதியில் கிரேன் ஒன்று சரிந்ததில் குறைந்தது 52 பேர் பலியாகியாகியுள்ளதாக முதல்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.


எப்படி இந்த விபத்து நடந்தது என்று தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் படங்களில் பலர் இறந்து கிடக்கும் காட்சிகளும் காயமடைந்து கிடக்கும் காட்சிகளும் காணப்படுகின்றன.

இம்மாதப் பிற்பகுதியில் ஹஜ் யாத்திரை துவங்கவிருக்கும் நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
BBC

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...