sireku

பிரான்ஸுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான சேனல் டனல் எனப்படுகின்ற சுரங்கப் பாதையின் 'கிட்டத்தட்ட' ஒட்டுமொத்த தூரத்தையும் நடந்தே கடந்துள்ள குடியேறி ஒருவர் பிரிட்டனை வந்தடைந்துள்ளார்.

ஆங்கிலக் கால்வாயின் கீழே கடலின் தரைக்கு அடியில் இந்த சுரங்கப் பாதை அமைந்துள்ளது.

கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடந்துவந்துள்ள சூடானைச் சேர்ந்த இந்த நபரை பாதுகாப்பு அதிகாரிகள் வழியில் நிறுத்தி கைதுசெய்துள்ளனர்.
இந்த அதிவேக சுரங்கப் பாதையில் ரயிலில் அடிபட்டு காயப்படவோ அல்லது உயிரிழக்கவோ கூடிய ஆபத்துக்கள் இருந்தும் இந்த நபர் அதனை நடந்து கடந்துவந்துள்ளதாக சுரங்கப்பாதையை நிர்வகிக்கும் யூரோடனல் நிறுவனம் கூறுகின்றது.

அண்மைக் காலங்களில் பிரிட்டனை வந்தடைய முயற்சிக்கும் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆனால், குடியேறிகள் முகாமிட்டுள்ள கலே பகுதியில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யூரோடனல் கூறுகின்றது.


0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...