sireku
2015/08/08 இரவு வேலையில்லா பட்டதாரிகளுடனான சந்திப்பினை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான இம்ரான் மகரூப்  ஏற்படுத்தியிருந்தார்.இதன்போது பட்டதாரிகளின் பிரட்சினைகள் சம்மந்தமாக விரிவாக அவர்களுடன் உரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியினால் வழங்கப்படவிருக்கும் வேலைவாய்ப்புகளில் இவர்களை உள்வாங்குவது ,வேலைவாய்ப்புகளில் உள்ள அரசியல் தலையீடுகள் ,திருகோணமலை மாவட்டத்தில் உள்ள  பல வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் வெளிமாவட்டங்களில் நியமனங்கள் வழங்கப்படுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது கிண்ணியா,முள்ளிப்பொத்தானை வேலையில்லாபட்டதாரிகள் பலர்கலந்து இருந்தனர்.