sireku


நடைபெற்று முடிந்த இலங்கை பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இறுதியாக கிடைத்த ஆசனங்களுடன், போனஸ் ஆசனங்களும் சேர்த்து ஐ.தே.க 106 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி போனஸ் ஆசனங்களுடன் 95 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.

அதேவேளை ஐ. தே.கவுக்கு ஆட்சியமைக்க இன்னும் 9 ஆசனங்கள் தேவைப்படுகிறதும் தேசிய அரசாங்கம் அமைய அதிகூடிய வாய்ப்புள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இறுதித் தேர்தல் முடிவு வெளியிடப்பட்டுள்ளது

ஐ.தே.க 106 ஆசனங்கள் (93 + 13 தேசியப் பட்டியல்)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 95 ஆசனங்கள் (83 + 12 தேசியப் பட்டியல்)

இலங்கைத் தமிழரசுக் கட்சி 16 ஆசனங்கள் (14 + 2 தேசியப் பட்டியல்)

ஜே.வி.பி 6 ஆசனங்கள் (4 + 2 தேசியப் பட்டியல்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனம்

ஈ.பி.டி.பி. 1 ஆசனம்

#Jaffna Muslim