கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் 25 பேரை நீக்கினார் மைத்ரி
sireku
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் 25 பேர், அக்குழுவிலிலுருந்து வெளியேற்றப்பட்டு, அந்த பதவிகளுக்கு புதிதாக 25 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தக்கட்சியின் தலைவரும் இலங்கை ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவின் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் என்கிற முறையில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மைத்ரிபால சிறிசேன இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிவிப்பின்படி பதவிகளில் இருந்து நீக்கப்பட்டவர்களில், நாட்டின் முன்னாள் பிரதமரும் தி மு ஜயரட்ண, மூத்த அமைச்சராக இருந்த ஜானக்க பண்டார தென்னக்கோன் போன்றோரும், ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்த சுஷீல் பிரேமஜயந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அனுர பிரயதர்ஷன யாப்பா ஆகியோரும் அடங்குவதாக தெரிகிறது.
BBC.

0 Comments