sireku

அடுத்த 5 வருட காலத்துக்குள் திருகோணமலை மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கமுடியும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளருமான இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை கிண்ணியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

சமீபத்தில் என்னை நேரடியாக கொழும்புக்கு அழைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி சம்பந்தமாக பல்வேறு விடயங்களைக் கலந்துரையாடினேன்.

கடந்த காலங்களில் இளைஞர், யுவதிகளுக்கு போதுமான அளவு வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் இம்மாவட்டத்தில் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்துள்ளதோடு தங்கி வாழ்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்ற விடயத்தை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.

இதனை கவனத்தில் கொண்ட பிரதமர் தேர்தலின் பின் ஆட்சியமைக்கும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் திட்டமிட்டுள்ள 10 இலட்சம் வேலைவாய்ப்புகளுள் எனக்கூடாக 10 ஆயிரம் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.

பிரதமர் எனக்கு வழங்கியுள்ள வாக்குறுதியின் மூலம் இங்குள்ள வேலையி;ல்லாப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும். எனது வெற்றியின் பங்குதாரர்களான தகுதி உள்ளோருக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படும். இதனையடுத்து ஏனைய தகுதியானவர்கள் கவனத்தில் கொள்ளப்படுவார்கள்.
எனவே, எனது வெற்றியின் பங்குதாரர்களாக மாறுவதற்கு அனைவரையும் என்னோடு கைகோர்க்குமாறு அன்புடன் அழைப்பு விடுக்கின்றேன்.
நன்றி http://madawalanews.com/79640