sireku

இக்பால் அலி
இப்பாகமுவ பக்மீகொல்ல பகுதியில் ஆறு பேர் கொண்ட குழுவினர் இன்று இரவு 9.30 மணி அளவில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்குச் சென்று வந்த இளைஞர்களை வாளால் வெட்டியும் தாக்குதல் நடத்தியும் சென்றுள்ளனர்..

இந்தத் தாக்குதலில் நான்கு இளைஞர்கள் வாள் வெட்டுக் காயத்திற்கு இலக்காகியுள்ளனர். இதில் கடுமையாக தாக்குதலுக்குள்ள இளைஞர் ஒருவர் தற்போது குருநாகல் போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் இருவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன் டையிலர் சொப் ஒன்றும் மற்றும் வீடு ஒன்றும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
எந்தக் காரணமின்றி இங்கு வருகை தந்த குழுவினர் தாக்குதல் நடத்தி விட்டுச் சென்றுள்ளதாக பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இதனுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை ஊர் மக்கள அடையாளம் காட்ட முடியும் எனவும் இவர்கள் கடந்த காலத்தில் பன்னல பள்ளிவாசல் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள். இனப்பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையிலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் பொது மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

தற்போது பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Read more: http://www.vanniexpressnews.com/2015/07/blog-post_326.html#ixzz3g1P2ZB9e 
 

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...