நஜீப் ஏ மஜீத் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டி!
எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உருப்பினரும் மூதூர் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான நஜீப் ஏ மஜீத் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
இது சம்பந்தமாக அவரிடம் வினவிய போது தான் இத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதிங்கியிருந்த நிலையில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன மற்றும் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரனதுங்க ஆகியோர்களின் சில நிபந்தனைகளுக்கும் வற்புத்தலுக்கமைவாகவே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடுவதாக நஜீப் ஏ மஜீத தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, முள்ளிப்பொத்தானை, தோப்பூர், கந்தளாய் மற்றும் மூதூர் ஆகிய பிரதேசங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கென தனியான வாக்கு வங்கியொன்றை தன்வசம் வைத்திருக்கும் இவர் 1989 ஆன்டு முதல் அரசியலில் ஈடுபட்டு உள்ளுராட்சி மன்ற தலைவர், பிரதியமைச்சர், அமைச்சர் மற்றும் முதலமைச்சர் பதவியையும் வகித்துள்ளார்.
0 Comments