எதிர்வரும் தேர்தலில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் என்னை ஆதரித்தவர்கள் வெற்றி பெறுவதையே நான் விரும்புகிறேன் என தெரிவித்த ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகத் தானே இருப்பதால் சுதந்திரக் கட்சி வென்றால் பிரதமர் பதவி கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவருக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி விவகாரத்தில் பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என ரணில் விக்கிரமசிங்கவிடம் தான் கோரியதாகவும் மத்திய வங்கி ஆளுனரை ராஜினாமா செய்யச் சொல்லி ரணிலின் நற்பெயரைக் காப்பாற்றிக்கொள்ளவும் தான் வேண்டியதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி எதிர்வரும் தேர்தலில் ஒரு கட்சி வெல்ல வேண்டும் என்பதை விட கடந்த ஜனாதிபதி தேர்தலில் தன்னோடு சேர்ந்து உழைத்த அனைவரும் வெற்றி பெற்று அவர்களின் பெரும்பான்மை பாராளுமன்றில் இருக்க வேண்டும் என்பதாகும் என தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடனேயே மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியானமையும் ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி உட்பட பல்வேறு சிறு கட்சிகளும் அ.இ.ம.கா மற்றும் இறுதி நேரத்தில் மு.காவும் இணைந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.