பெற்ற தன் குழந்தையை பள்ளிவாசலில் பரிதவிக்கவிட்டுச் சென்ற தாயை திருகோணமலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

திருகோணமலை  ஏகாம்பரம் வீதியில் உள்ள முஹைதீன் ஜும்மா பள்ளி வாசலுக்கு அருகில் கடந்த வாரம் அனாதரவாக கண்டு பிடிக்கப்பட்ட குழந்தையின் தாயைக் நேற்று பொலிசார் கைது செய்துள்ளனர்.

தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் வைத்தே இவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு ஒரு குழந்தை உள்ளதாகவும் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண் வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப் பெண் 24 வயதானவர் என்றும், இவரின் கணவரை பிரிந்தவர் என்பது விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.