sireku

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடற் பகுதியில் இருந்த தீவுகளுக்கு சூட்டப்பட்டிருந்த சீனப் பெயரை கூகுள் தனது கூகுள் மெப்பில் இருந்து நீக்கியுள்ளது.
பிலிப்பைன்ஸை சேர்ந்த பலரிடமிருந்து வந்த புகார்களையடுத்து கூகுள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சீன மொழியில் ஸோங்ஸா தீவுகள் என்று அறியப்பட்டிருந்த அந்தத் தீவுகள், பவளப்பாறைத் தொகுப்புகளை, அவற்றின் சர்வதேசப் பெயரான ஸ்கார்பாரோ ஷோல் என்று கூகுள் மாற்றியுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள மீன் வளத்தின் காரணமாக சீனாவும் பிலிப்பைனும் அந்தப் பகுதிக்கு உரிமை கொண்டாடி வருகின்றன.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் நியாய சபையில் பிலிப்பைன்ஸ் முறையிட்டிருக்கிறது. ஆனால், சீனா இந்த விசாரணையில் பங்கேற்க மறுத்துவிட்டது.
அந்தப் பகுதியை சீனா ஹுவாங்கியான் தீவு என்றும் பிலிப்பின்ஸ் பனடாக் ஷோல் என்றும் அழைத்து வருகின்றன.
நிலப்பகுதியின் பெயர்கள் ஆழமான உணர்வுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை தாங்கள் புரிந்துக்கொண்டிருப்பதாக கூகுள் நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. (ஸ – மு)

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...