பாராளுமன்றம் கலைக்கப்பட்டது: புதிய பாராளுமன்றம் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி .
sireku
நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டது.
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் மற்றும் 1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க, பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10 ஆவது விதிமுறைக்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலின் பொருட்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் நிறைவுபெறவுள்ளன.
இதுதவிர, புதிய பாராளுமன்றம் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி கூடவுள்ளதாகவும் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments