குளியாபிட்டிய  வைத்தியசாலையில் தான் பிரசவித்த குழந்தையை மாற்றி அதற்கு பதிலாக இறந்து பிறந்த பெண் குழந்தை ஒன்றை தனக்கு வழங்கியதாக தெரிவித்து தாய் ஒருவர் குளியாபிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தான் பிரசவத்திற்கு முன்னர் மேற்கொண்ட வைத்திய பரிசோதனைகளின் போது தனக்கு ஆண் குழந்தையே பிறக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் இறந்து பிறந்ததாக பெண் சிசு ஒன்றே தனக்கு வழங்கப்பட்டதாகவும் அந்ததாய் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாட்டையடுத்து குளியாபிட்டிய பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்ததில் தற்போது முறைப்பாட்டாளாரான தாய் தன்னுடையதல்ல எனக் கூறும் இறந்த குழந்தையினை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் அறிக்கையையும், டீ. என். ஏ அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு குளியாபிட்டிய நீதிவான் பந்துல குணரத்ன பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.


வழங்கப்படும் அறிக்கைகளில் குறிப்புக்களும் எழுதும் போது சில தவறுகள் இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் தனது தலைமையில் உள்ளக விசாரணைகள் இடம்பெற்றதாகவும் தெரிவித்த குளியாபிட்டிய  வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி, குறித்த தாயின் குற்றச்சாட்டு தவறானதெனவும், இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார் .
நன்றி  : jafnamuslim

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...