sireku

புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் தொடர்புடையவர்களை யாழ். நீதிமன்றத்துக்கு இன்று கொண்டு வருவதையடுத்து அங்கு ஒன்றுகூடிய மக்களினால் நீதிமன்றப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
மாணவி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் மற்றும் சுவிஸ் நாட்டுப் பிரஜை ஆகியோரை யாழ். நீதிமன்றத்துக்கு இன்று கொண்டு வருவதாக அறிந்த மக்கள் அங்கு ஒன்றுகூடினர்.
மக்கள் ஒன்றுகூடியமையால் நீதிமன்ற அனைத்து வீதிகளும் மூடப்பட்டு, பாதுகாப்பு வேலிகள் போட்ட பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தினர் எனினும் வேலிகளுக்கு அருகில் கூடிய மக்கள் குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி கோஷங்கள் எழுப்பினர்.
அதில் சிலர் நீதிமன்ற கட்டடத்துக்கு கற்களை வீசினர். யாழ். நீதிமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் 107  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் அங்கு மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...