sireku

பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு வாக்குறுதிகள் வழங்குவதற்கும் அவற்றைச் செயற்படுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என தெரிவித்துள்ள மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, ரிசாத் பதியுதீன் முழு மூச்சுடன் இருந்து செயற்படாவிட்டால் மன்னார் மக்களின் மீள் குடியேற்றம் வெறும் வாக்குறுதியாகத்தான் இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் குறித்த விடயத்தை சர்ச்சைக்குள்ளாக்கும் தொலைக்காட்சியிலேயே கலந்துரையாடலுக்குச் செல்லும் அமைச்சரைப் பாராட்டியுள்ள அவர், வெளியில் இருந்து விமர்சனம் செய்பவர்களில் எத்தனை பேர் அந்த மக்களின் துன்பத்தில் பங்கெடுப்பார்கள்? என கேள்வியெழுப்பியுள்ளதோடு இவ்வாறு சந்தர்ப்பவாதம் பேசாது அதற்காகப் பணியாற்றும் ரிசாத் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.sonakar.com/?p=53666