sireku



 ஈரானின், அணு ஆயுத தயாரிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அணு ஆயுதங்களை தயாரிக்க விரும்பும் சவுதி அரேபியாவுக்கு, தேவையான தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் வழங்க உள்ளது. 

 இதுதொடர்பாக, பிரிட்டனில் இருந்து வெளியாகும், 'சண்டே டைம்ஸ்' பத்திரிகையில், அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் ஒருவர் கூறியுள்ளதாவது: அரசியல் ரீதியான விஷயங்களில், பாகிஸ்தானுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே நீண்ட கால ஒப்பந்தம் உள்ளது.

 இதுகுறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், அணு ஆயுத தயாரிப்பில், சவுதிக்கு தேவையான உதவிகளை செய்ய, பாக்., முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான தொழில்நுட்பத்தை, சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் வழங்குகிறதா இல்லையா என்பதை, பல நாடுகளின் உளவு துறையினரும் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.