sireku

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிராக லஞ்ச ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினால் பிரதமர் பதவியை வழங்குவதாக அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தமை ஓர் லஞ்சம் வழங்குதலாகும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் 3.00 மணியளவில் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்புப் பிரிவில் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

1981ம் ஆண்டு 15ம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் தனது வெற்றியை உறுதி செய்து கொள்வதற்காக பதவிகளை வழங்குவதாக உறுதியளித்தல், பதவிகளை வழங்குதல் மற்றும் பதவிகளை பொறுப்பேற்றலும் லஞ்ச ஊழலாகவே கருதப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிக்காக பாடுபட்டால் பதவி வழங்குவதாக அறிவித்தமையும் வெற்றியின் பின்னர் பதவியை ஏற்றுக்கொண்டமை காரணமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் லஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் முடிந்து விட்டது, இனி எங்களது 100 நாள் ஆரம்பமாகியுள்ளது என உதயக கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நன்றி Jaffna Muslim