sireku

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு இன்று வாக்குமூலம் அளிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
என்ன விடயம் குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது என்பது குறிப்பிடப்படாத காரணத்தினால் இன்று வாக்குமூலம் அளிக்க முடியாது.
ஜனாதிபதி என்ற ரீதியில் தமக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரத்தின் அடிப்படையிலேயே நான் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு பதவியை வழங்கினேன்.
என்ன காரணத்திற்காக என்னிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது என்பது பற்றிய விபரங்களை லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.
என்ன விடயம் குறித்து விளக்கம் தேவைப்படுகின்றது என்பதனை அறிந்து கொள்ளும் உரிமை எனக்கு உண்டு.
முறைப்பாட்டை யார் செய்தார்கள், முறைப்பாட்டில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள், விசாரணை நடத்தப்படும் முறைமை குறித்தும் அறிந்து கொள்ளும் உரிமை எனக்கு உண்டு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலபட்டபெந்திக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு சமூகளித்து வாக்குமூலமொன்றை அளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பை வெளியிட்டதனைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதியிடம் சென்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ள லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு இணங்கியிருந்தது.

நன்றி tamilwin

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...