sireku


இலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷலாக முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவ நிலைகளில் உயர்ந்த நிலையாகக் கருதப்படும் பீல்ட் மார்ஷல் பதவி நியமனங்கள் அரிதாகவே இடம்பெறுவதோடு பெரும்பாலும் யுத்த வெற்றி போன்ற சாதனைகளின் பின்னணியில் வேறு சில நாடுகளில் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் உரிமைகள் மறுக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்திருந்த நிலையில் புதிய ஆட்சியில் பறிக்கப்பட்ட அனைத்து உரிமைகளும், கௌரவங்களும் மீள வழங்கப்பட்டுள்ள நிலையில் சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷலாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இவ்வாறு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட வேண்டும் என பயங்கரவாதி ஞானசார கோரியிருந்தமையும் பீல்ட் மார்ஷலாக உள்ளவர் இளைப்பாறும் நிர்ப்பந்தமும் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
www.sonakar.com