sireku
போலிக் கடவுச் சீட்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் என்நேரமும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச தனியார் மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜதந்திர கடவுச்சீட்டு உட்பட இரு வேறு கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த அவர் இரு கடவுச்சீட்டுக்களிலும் முரண்பாடான தகவல்களைக் கொண்டிருந்ததன் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது கைதாகியிருப்பதும் கடந்த 19ம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வரும்படி அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது-sonakar.com