sireku


அப்­பாவி முஸ்­லிம்களை எமது உற­வு­க­ளா­கவே நேசிக்­கின்றோம் என 
தெரி­விக்கும் பொது­பலசேனா பௌத்த அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞானசார தேரர் சவூதி அரே­பியா என்ற நினைப்பில் இலங்­கைக்குள் செயற்­பட்டால் வேடிக்கை பார்க்­க­மாட்டோம் எனவும் குறிப்­பிட்டார். பொது­பலசேனா பௌத்த அமைப்­பினால்  கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போது முஸ்லிம் சமூ­கத்தின் மீதான அடக்­கு­மு­றைகள் தொடர்பில் வின­விய போதே அவர் 
மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

       இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பிட்­ட­தாவது,

பொது பல சேனா அமைப்பு கடந்த காலங்­களில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு 
எதி­ரான பல செயற்­பா­டு­களை செய்­த­தாக ஊட­கங்கள் தவ­றாக எம்மை 
சித்­தி­ரித்­து­விட்­டது. நாம் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் முஸ்லிம் 
சமூ­கத்­திற்கு எதி­ராக செயற்­ப­ட­வில்லை. அப்­பாவி முஸ்லிம் மக்­களை நாம் 
ஒரு போதும் தண்­டிக்­க­வில்லை. தர்கா நகர் சம்­பவம் சிங்­கள சமூ­கத்தை 
தவ­றாக சித்­தி­ரித்து விட்­டது. அர­சினால் நடந்த குழப்­பங்கள் 
அனைத்­திற்கும் பின்­ன­ணியில் பிரி­வி­னை­வாத முஸ்லிம் குழுக்­களே காரணம். 
ஆனால் முஸ்லிம் அமைப்­புக்­களும் அர­சியல் வாதி­களும் பக்­கச்­சார்­பாக 
கருத்­துக்­களை பரப்பி விட்­டனர்.

நாம் முன்­வைத்த கருத்­துக்கள் அப்­பாவி முஸ்லிம் மக்­க­ளுக்கு 
எதி­ரா­ன­தல்ல. நாம் தெரி­வித்த கருத்­துக்கள் அனைத்­துமே பிரி­வி­னையைத் 
தூண்டும் தீவி­ர­வாத முஸ்லிம் குழுக்­க­ளுக்கு மட்­டுமே சாரும். ஆனால் எமது
கருத்­துக்­களை அப்­பாவி முஸ்லிம் சமூ­கத்­திடம் தவ­றாக கொண்டு சென்று 
விட்­டனர். நாம் ஹலால் முறை­மை­யினை எதிர்க்­கின்றோம். அதற்கு 
காரணம் உள்­ளது இலங்கை பன்­முக சமூக நாடு.இது சவுதி அரே­பியா போன்ற இஸ்­லா­மிய தீவி­ர­வாத சட்­ட­திட்டம் உள்ள நாடெனின் இங்கு மத சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த முடியும்.ஆயினும் பல இன மக்கள் வாழ்­கின்ற நிலையில் இஸ்­லா­மிய சட்­ட­திட்­டங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுப்­பது ஏற்றுக் கொள்ள முடி­யாது
.
 அதேபோல் ஆடை­க­ளிலும் இஸ்­லா­மிய சட்­டங்கள் மோச­மா­கவே நடந்து 
கொள்­கின்­றது. முக­ மூடி உடைகள் அணி­வது தேசிய பாது­காப்­பிற்கு 
அச்­சு­றுத்­த­லா­னது. அதேபோல் நபரை அடை­யாளம் கண்­டு­கொள்ள முடி­யா­த­போது 
எப்­படி சமூக ஒற்­றுமை நோக்கி பய­ணிப்­பது. 
மேலும் முக­மூடி போன்ற ஆடைகள் 
அணி­வது அச்­சத்தை ஏற்­ப­டுத்தி விடு­கின்­றது. இது தொடர்பில் எம்மால் இணங்கி செயற்­பட முடி­யாது.

மேலும் சிங்­கள நபர் தமிழ் நபரை திரு­மணம் செய்து கொள்­வதால் மத 
சிக்­கல்கள் எதுவும் வரப் போவ­தில்லை. ஆனால் சிங்­கள தமிழ் நபர் ஒருவர் 
முஸ்லிம் நபரை விரும்பி திரு­மணம் செய்தால் மட்­டுமே மத மாற்ற 
செயற்­பாட்­டிற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­கின்­றது. அதேபோல் சிங்­கள 
தமிழ் பெண்களை மதம் மாற்றி இஸ்லாமிய மதத்தின் பால் மாற்றும் நடவ டிக்கை 
இன்றும் தொடர்கின்றது.

இது அனைத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. 
இலங்கை முஸ்லிம் நாடு அல்ல. அதனை ஒவ்வொரு முஸ்லிமும் நினைவில் வைத்தே வாழ 
வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


  நன்றி  www.jaffnamuslim.com

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...