sireku
முள்ளிப்பொத்தானை ஜபருல்லாஹ் 

சவூதி அரேபியாவின் போக்குவரத்து விதிகளின் படி சிகப்பு விளக்கு எரியும் போது வலது புறம் திரும்புபவர்கள் மட்டும் சில வினாடிகள் நின்று விட்டு வலது புறம் திரும்பினால் சிக்னலுக்கான கேமரா படம் பிடிக்காது.

அவ்வாறு சில வினாடிகள் நிற்காமல் அப்படியே வலது புறம் திரும்பினால் கேமரா படம் பிடித்து அவராதம் விதிக்கப்பட்டது.

ஆனால் இன்று முதல் வலது புறம் திரும்புவதாக இருந்தாலும் பச்சை விளக்கு எறிந்தால் மட்டுமே செல்ல வேண்டும்.

எப்போதும் போல் சில வினாடிகள் நின்று விட்டு வலது புறம் திரும்பினாலும் கேமரா படம் பிடிக்கும்.

500 ரியால் (இலங்கை மதிப்பில்அண்ணளவாக 17500 ரூபாய்) அபராதமும் 24 மணிநேரமும் சிறை தண்டனையும் விதித்து புதிய அறிவிப்பினை சவூதி போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் பணி புரியும் நம் சகோதரர்கள் இந்த தகவலை அனைவருக்கும் உடனடியாக கொண்டு செல்லுங்கள். அல்லாஹ் அருள் புரிவானாக....

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...