அரச தலைவர்களை வரவேற்க மாணவர்களை வீதியில் நிறுத்தக்கூடாது ~ இது மைத்திரி யுகம்.
sireku
சுதந்திர தின நிகழ்வில் பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் அணிவகுப்புக்களை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
தான் கலந்து கொள்ளும் தேசிய நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களை வீதிகளில், வெயில்களில் நிறுத்தி தன்னை வரவேற்பதை நிறுத்துமாறும், மாணவர்களைக் கஷ்டப்படுத்தி வழங்கப்படும் வரவேற்பு தனக்குத் தேவையில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தேசிய தொலைக்காட்சிகளில் வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். சில தினங்களில் சுதந்திர தினம் நடைபெறவுள்ளது.
”சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் அணிவகுப்புக்கள், பேரணிகள் எதற்கும் அனுமதி வழங்கப்படாது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் பணிப்புரை வழங்கியுள்ளேன்” எனவும் குறிப்பிட்டார்.

0 Comments