sireku

மீரா நகர் தம்பல காமம். லாபீர் சராப்தீன்


திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா வலையகல்விக்கு உட்பட்ட பாட சாலையான தி\ கிண்\ மீரா நகர் முஸ்ளிம் வித்தியாலயத்தில் அன்மையில் 1ம் ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்க்கென ஒவ்வொரு மாணவ மாணவிகளின் பெற்றோர்கலிடமுமிருந்தும் 1800 ரூபா வீதம் அறவிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார் .மேலும் அவர் கூறியதாவது.

திருகோனமலை மாவட்டத்தின் கிண்ணியா வலையகல்விக்குல் உட்பட்ட பாட சாலைகலில் ஒன்றுதான் தி\ கிண்\ மீரா நகர் முஸ்ளிம் வித்தியாலயம் இந்த பாடசாலையில் மீரார நகர் மற்றும் தாயிப் நகர் போன்ற கிராமங்களிள் அன்றாடம் கூலி தொழில் செய்து தங்கலுடைய வாழ்க்கையை கடத்த கூடிய குடும்பங்களிள் உள்ள குழந்தைகலே இந்த பாட சாலையில் கல்வி கற்கின்றனர்.

 இவ்வாரிருக்கையில் அன்மையில் 1ம் ஆண்டு மாணவர்கலை சேர்ப்பதற்க்கென ஒவ்வொரு மானவ மானவிகளின் பெற்றோர்கலிடமுமிருந்தும் அப்பாடசாலையினால்  1800 ரூபா வீதம் அறவிடப்பட்டுள்ளது இதற்கான பற்றுச்சீட்டோ அல்லது எந்த விதமான ஆதாரங்கலும் அந்த பெற்றோர்கலுக்கு வழங்கப்படவில்லை.

 தங்கல் குழந்தைகளின் கல்வி கெட்டுவிடும் என்ற அச்சத்தில்  தாங்கல் 2 நாட்க்கல் பட்டினி கிடந்து கூட குழந்தைகலின் கல்விக்காக அந்த பணத்தை கொடுத்திருக்கிறார்கள் ஆனால் அதற்க்கான வரவு செலவு கூட இதுவரை காட்டவில்லை என  குறிப்பிட்டார்,

இது தொடர்பாக பாடசாலை அதிபரை சிறகு தொடர்பு கொண்டு கேட்ட போது “தமக்கு இதில் தொடர்பு இல்லை ,இது பாடசாலை அபிவிருத்தி குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானம் “ என்று குறிப்பிட்டார்.

பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளரை சிறகு தொடர்பு கொண்ட போது “அரசாங்கதினால் கடந்த 2000ம்  ஆண்டிற்க்கு பின்பு மாணவர்களுக்கான தளபாடங்கள் எதுவும் வழங்கப்படவில்லை அதனால்  மானவர்களுக்கான தளபாடங்கல் இல்லை ஆகவே இத்தேவையை பூர்தி செய்யவே பணம் பெறப்பட்டதாக கூறினார்.”

 இது யார் குற்றம் கல்வி அமைச்சின் குற்றமா அல்லது அதிபர்கலின் குற்றமா?பாடசாலை அபிவிருத்தி குழுவின் குற்றமா? இதனை சீர் செய்வது அதற்க்கான அதிகாரிகளின் கடமை அல்லவா/???

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...