படகு கடலில் மூழ்கியதில் ஒரே குடுமபத்தை சேர்ந்த மூவர் பலி – கிண்ணியாவில் சம்பவம்
sireku
கிண்ணியா,காக்காமுனை பிரதேசத்திலிருந்து கப்பல்துறைக்கு படகில் சென்ற 7 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் இன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கர்ப்பினி தாய் அஸ்மா உம்மா (30), முகம்மது பனூஸ் (11), முனீஸா (09) ஆகியோர்களே உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் சென்ற மற்றைய நால்வருக்கும் எவ்விதமான ஆபத்துகளும் ஏற்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments