திருகோணமலை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்.[படங்கள் இணைப்பு]
sireku
திருகோணமலை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் கிண்ணியாவில் இன்று (27,01,2015) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் முள்ளிப்பொத்தானை, தம்பலாகமம்,நிலாவெளி என பல பகுதிகளிள் இருந்து பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்திற்குள் தங்களையும் உள்வாங்கி உடனடியாக நியமனம் வழங்குமாறு கோரி வேலையற்ற பட்டதாரிகள், கிண்ணியா நகர சபையில் இருந்து கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை பிரதேச செயலாளரிடம் பட்டதாரிகள் வழங்கியதுடன் பிரதேச செயலகத்திற்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்,பல்வேறு பதாதைகளை ஏந்தியிருந்ததோடு கோசங்களையுமும் எழுப்பினர்.
இதனையடுத்து, குறித்த இடத்திற்கு வருகை தந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.மஹ்ரூப்பினால் அளிக்கப்பட்ட வாக்குறுதியைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
0 Comments