sireku


கிண்ணியா, கச்சக்கொடித்தீவு பிரதேசத்தில் ஒன்றரை வயது குழந்தையொன்று வெள்ளத்தில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (29) இடம்பெற்றுள்ளது. 

பொலிஸ் உத்தியோகத்தரான பளீல் முகம்மது றயிஸ் என்பவரின் குழந்தையே இவ்வாறு பலியாகியுள்ளது.

 குழந்தை, விளையாடிக் கொண்டிருந்த நிலையில் வீட்டு முற்றத்தில் தேங்கியிருந்த வெள்ளத்தில் விழுந்துள்ளது. உடனடியாக மீட்கப்பட்டு, கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், குழந்தை அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

 இச்சம்பவம் தொடர்பில் கிண்ணியா, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
jaffnamuslim

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...