sireku



மாட்டு வண்டியில் ஆற்றை கடக்க முற்பட்ட இருவருள் ஒருவர் மாட்டு வண்டியோடு நீரில்  அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போயுள்ள சம்பவம் கிண்ணியாவில் இடம்பெற்றுள்ளது. 
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரதேசத்துக்குட்பட்ட கிரான் சாவாற்று ஆற்றை கடக்க முற்பட்ட வேளையிலேய இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தமது தொழில் நிமித்தம் விறகுகளை வெட்டி எடுத்துக்கொண்டு கடந்த 1ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் வீடு திரும்பிய இவர்கள் மாட்டு வண்டியில் ஆற்றை கடப்பதற்கு முயற்சித்துள்ளனர். அப்போது ஆற்று வெள்ளத்தில் மாடுகள் இரண்டுடன் வண்டியும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. வண்டியையும் மாடுகளையும் காப்பாற்ற முனைந்த வேளை ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். மற்றவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
இரண்டு மாடுகளும் வண்டியும் தற்போது கரை ஒதுங்கியுள்ள போதிலும் காணாமற் போனவர் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. ஆயினும் அவரை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. 
மகாமாறுக் கிராமத்தைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தந்தையான அப்துல் வஹாப் பிர்தெளஸ் (வயது 47) என்பவரே மேற்படி சம்பவத்தில் காணாமல் போயுள்ளார்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...