"பெஷாவர் சம்பவத்தால் எங்களது இதயங்கள் வலியால் துடிக்கின்றன" அல்கொய்தாவின் அறிக்கை..!!
sireku
பாகிஸ்தானின் பெஷாவர் இராணுவ பள்ளி தாக்குதல் குறித்து தெற்காசிய அல்கொய்தாவின் செய்தித் தொடர்பாளர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள இராணுவ பள்ளி ஒன்றில் புகுந்த 6 தாலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 132 குழந்தைகள் உட்பட 145 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ பாகிஸ்தான் எனப்படும் பாகிஸ்தான் தாலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்நிலையில் இவர்களின் தாக்குதல் தொடர்பாக தெற்காசியாவுக்கான அல்கொய்தா பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஒசாமா முகமது (Osama Mohammed) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, பெஷாவர் சம்பவத்தால் எங்களது இதயங்கள் வலியால் துடிக்கின்றன. இச்சம்பவம் எங்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாகிஸ்தான் இராணுவத்தின் குற்றங்களும், கொடுமைகளும் எல்லை கடந்து விட்டன என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும் அமெரிக்காவின் அடிமையாக பாகிஸ்தான் இராணுவம் மாறியது மட்டுமின்றி இஸ்லாமிய இனப்படுகொலயும் நடந்து வருகிறது.
அல்லாவின் எதிரியான அமெரிக்காவுக்கு எதிராக நாம் ஆயுதம் ஏந்தியிருக்கும் நாம், அப்பாவிக் குழந்தைகள், பெண்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரி அல்ல என்றும் அவர்களை பழிவாங்கக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
0 Comments