முள்ளிப்பொத்தானையில் கடும் அடை மழை..!!
sireku
அதிக மழை காரணமாக முள்ளிப்பொத்தானை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது,நேற்றிரவு முதல் பெய்துவரும் கடும் அடை மழையின் காரணமாக பிரதேசம்
வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
கந்தளாய் குளத்தில் நீர் நிரம்பியுள்ளதனால் அதன் 10 வான் கதவுகளும் இன்றுமுழுமையாக திறக்கப்பட்டுள்ளது .ஒரு விநாடிக்கு இந்த வான் கதவுகளிலிருந்து 7000 கன அடி நீர் வெளியாவதாக பொறியியலாளர் தெரிவித்துள்ளார். இந்த வான் கதவுகள்
திறக்கப்பட்டதனால் 1000 ஏக்கர் வயல் நிலம் நீரில் மூழ்கியுள்ளது .
அதிக மழையின் காரணமாக முள்ளிப்பொத்தானையின் பல பகுதிகல் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.பெய்து வரும் இந்த மழையால் முள்ளிப்பொத்தானையில் உள்ள பரவிபாஞ்சான் குளம்,ஈச்சம் குளம் மற்றும் குட்டைகள், ஏரிகள் நிரம்பியுள்ளது
0 Comments