தாம் எடுத்த முடிவை கிடப்பில் இருத்தி தலைமைகளின் முடிவுக்காக காத்திருக்கும் முஸ்லிம் சமூகம்.
sireku
நன்றி : முள்ளிப்பொத்தானை ஜபருல்லாஹ்
ஜனாதிபதி தேர்தலுக்கு திகதி அறிவிக்கப்பட்ட தினம் தொடங்கி வேட்பாளர்கள்
தமது தேர்தல் பிரச்சாரங்களில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்
இவ்வேளையில் ஒவ்வொருவரும் தங்களின் ஆதங்கங்களையும் ஆதரவுகளையும்
வெளிப்படையாவும் மறைமுகமாகவும் ஆங்காங்கே சிலேடையாக தமது கருத்துக்களை
சிலரும் தெரிவித்து வருவதை இங்கு நாம் வெகுவாக அவதானிக்கக் கூடியதாக
இருக்கின்றது.
இவர்களின் கருத்துகளுக்கு களம் அமைத்துக் கொடுப்பது போல் பல சமூக வலைத்தளங்களும் ஊடகங்களும் தமது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகின்றன.
நடை பெற இருக்கும் ஜனாதிபதித் தேர்த்தலை ஓர் பொதுவான அடிப்படையில் நோக்கினால் இந்த தேர்தலில் ஜனநாயகத்தின் குறிக்கோள் ஒன்றாக இருப்பினும் மக்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் அபிலாசைகளும் பல கிளைகளைக் கொண்ட ஓர் விருட்சமாக இருக்கின்றது.
பெரும்பான்மையினரை பொறுத்தவரை நாட்டின் பொருளாதார சீர்குலைவு, குடும்ப ஆட்சி, நிர்வாக சிக்கல் போன்றவற்றை முன் வைத்து ஆட்சி மாற்றத்தை வேண்டி நிற்கின்றனர்.
சிறுபான்மையினரோ இந்த நாட்டில் தாம் ஜனநாயக உரிமையோடு யாருக்கும் எந்த உரிமை மறுப்புக்களும் இல்லாது எல்லா மக்களும் சம உரிமையோடு வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்கக் கூடிய ஒரு தலைமையின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றனர்.
இந்த நிலையில் மக்களின் எண்ணங்களையும்
அபிலாசைகளையும் முழுமையாக ஒரு அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாது என்ற நிலை இருந்தாலும் கூட ஓரளவு இரு பகுதியினரையும் கவரக்கூடிய அளவுக்கு ஒரு ஆட்சி அமைவது இன்று காலத்தின் தேவையும் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்புமாக இருந்து கொண்டிருக்கின்றது.
இதற்கமையவே ஒவ்வொரு சமூகத்தினரும் தான் சார்ந்த கட்சியையும் தனது தலைமைகளையும் எதிர்பாத்தவர்களாக அவர்களின் விருப்புக்கேற்ப தமது வாக்குகளை வழங்குவதன் மூலம் தமது உரிமைகளை முழுமையாக இல்லாவிடினும் ஓரளவாவது பெற்றுக்கொள்ளலாம் என்ற மன நிலையோடு காலங்காலமாக செயல் பட்டு வருகின்றனர். இந்த நிலைப்பாட்டில் பெரும்பாலும் முஸ்லிம் சமூகமே முன்னணியில் நிற்பதை நாம் யாரும் மறுக்க முடியாது.
தொடர்ச்சியாக இதே நிலை தொடர்ந்தாலும் பரவாயில்லை ஒரு தலைமையின் கீழ் இருப்போம் என்ற நிலைப்பாட்டில் இருந்த முஸ்லிம் சமூகத்தை கடந்த காலங்களில் நடந்த கசப்பான சம்பவங்களான ஹலால்,ஹபாயா,ஹாதி நீதிமன்றம்,உள்ளிட்ட ஷரீஆ சட்டங்களுக்கு எதிரான பிரச்சினைகளோடு மட்டுமல்லாமல் அனுராதபுரத்தில் தொடங்கிய பள்ளிவாயல் இடிப்பு தம்புள்ளை ஊடாக வந்து முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்கும் நோக்கில் அளுத்கமை வரை ஒரு கரி நாளாக வியாபித்திருதமை அவர்களை வெகுவாக பாதித்ததோடு நின்று விடாமல் அதற்கெதிராக தலைமைகள் மேற்கொண்ட முன்னெடுப்புக்கள் கூட திருப்தியை விடுத்து அதிருப்தியையே அவர்களுக்கு பரிசாகக் கொடுத்தது.
இதன் விளைவு, எதிர்காலத்தில் மேலும் இவர்களையும் இவர்கள் ஆதரவு வழங்கும் அரசையும் நம்பலாமா என்ற ஓர் அச்சமும் பீதியும் கலந்த சந்தேகத்தையும் முஸ்லிம்களின் மனதில் நிலை கொள்ள செய்து விட்டது.
அதன் தொடர்ச்சி மென்மேலும் பேரினவாதிகளால் அரங்கேற்றப்பட்டமையும் அதனை அரசும் அதற்கு ஆதரவு வழங்கும் தலைமைகளும் கண்டு கொள்ளாமல் நுனிப்புல் மேயும் நடவடிக்கைகளை மேற்கொண்டமையும், முஸ்லிம் தலைமைகளிலும் அரசாங்கத்திலும் முஸ்லிம்களுக்கு இருந்த மீதி நம்பிக்கையும் செயலிழக்க செய்து விட்டது.
தலைமைகளின் இந்நடவடிக்கையானது ஊவா தேர்தலில் முஸ்லிம்கள் அரசுக்கும் தலைமைகளுக்கும் எதிராக தமது வெறுப்பை வெளிப்படையாகவே காண்பிக்கத் தூண்டியதுடன் காலப்போக்கில் இந்நிலை முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகள் உள்ள முஸ்லிம்களின் மன நிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
இதன் விளைவு இன்றைய சூழலில் முஸ்லிம்கள் ஜனாதிபதியாக யாரைத் தெரிவு செய்வது என்பதை தலைமைகளின் முடிவை விட தாங்களே ஒரு முடிவை சுயமாக எடுக்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளது.
எது எவ்வாறாயினும் தமது தலைமைகளின் மீதுள்ள நம்பிக்கையும் தலைமை தம்மீது கொண்டுள்ள நம்பிக்கையும் வீணாகி விட கூடாது என்பதில் இரு சாராரும் ஒரே பாதையில் பயணிப்பதையும் நாம் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. இருப்பினும் முன்னெப்போதுமில்லாதவாறு தமது முடிவுக்கு தலைமைகளின் முடிவு ஒத்து வருமா என்ற எதிர்பார்ப்போடு தான் முஸ்லிம்கள் தமது முடிவை கிடப்பில் போட்டு விட்டு தம் முடிவை ஒத்த முடிவை தலைமைகள் எட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
தலைமைகள் முஸ்லிம்களின் மனத்தில் உள்ள ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கும் முடிவை எடுப்பார்களா அல்லது அதற்கு மாற்றீடாக தங்களின் முடிவை அறிவித்து முஸ்லிம்களை தமது விருப்புக்கு ஆட்கொள்வதற்காக வழமையான பல்லவிகளைப் பாடி மேலும் இன்னல்களுக்குள் உள்ளாக்குவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
எது எவ்வாறாயினும் முஸ்லிம்கள் எடுத்திருக்கும் முடிவில் யார் என்ன சொன்னாலும் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.

0 Comments