sireku

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது.

“நூறு நாட்களில் புதிய தேசம்” எனும் கருப்பொருளில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் 11 அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1. ஜனநாயகத்தை உறுதிசெய்யும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு
2. நாட்டைக் கட்டியெழுப்பும் பொருளாதாரம்
3. பண்பாடுள்ள சமூகம்
4. பாதுகாப்பான உணவு மற்றும் நிரந்தர விவசாயம்
5. அனைவருக்கும் சிறந்த சுகாதாரம்
6. நவீன சவால்களை வெற்றிகொள்ளும் இலவசக் கல்வி
7. நாட்டைப் பாதுகாக்கும் விதமான சர்வதேச தொடர்புகள்
8. தொழிலின்மையை குறைக்கும் கைத்தொழில்கள் மற்றும் சேவைகள்
9. முன்னேற்றமடைந்த அரசதுறை
10. எரிசக்தி பராமரிப்புடன் கூடிய இலங்கை
11. அர்த்தமுள்ள ஊடக சுதந்திரம்
ஆகிய அம்சங்கள் புதிய ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
newsfirst.lk