sireku


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளிப்பதாக கூறவில்லை – ஞானசார தேரர்-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளிப்பதாக கூறவில்லை என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கோ அல்லது அரசாங்கத்திற்கோ ஆதரவளிப்பதாக தாம் ஒருபோதும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டே நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை சீர்குலைப்பதற்கு சர்வதேச சதித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவே அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சதித் திட்டத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களே இதற்கான தீர்மானத்தை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சூழ்ச்சித் திட்டம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தமது நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், அண்மையில் மைத்திரிபால சிறிசேனவை மீளவும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ஞானசார தேரர் கோரியிருந்தார்.
மேலும் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாகவும் நேரடியாக மேடைகளில் பேசப் போவதில்லை எனவும் இயக்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் டிலந்த விதானே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டுமென அவர் கோரியிருந்தார்.
http://www.globaltamilnews.net/

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...