sireku

சீனாவில் 18 வருடங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்ததாக மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒரு பதின்ம வயது சிறுவன் நிரபராதி என்று இப்போது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே மரணதண்டனைக்கு உள்ளாகிவிட்ட அந்த சிறுவன் ஒரு நிரபராதி என்று சீன நீதிமன்றம் ஒன்று மிகவும் அபூர்வமாக தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்தப் பெண்ணை கொலை செய்ததாக இன்னுமொரு நபர் இப்போது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததை அடுத்து, ஹுக்ஜில்ட் என்னும் அந்த பதின்ம வயது சிறுவனுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
ஏற்கனவே மரண தண்டனை நிறைவேற்றுப்பட்டுவிட்ட அந்த சிறுவனின் பெற்றோர் நீதிமன்றத்தில் கண்ணீருடன் காணப்பட்டனர். அவன் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கிய போது நீதிபதி எழுந்து நின்று அவனது பெற்றோரை நோக்கி குனிந்து வணக்கம் செலுத்தினார்.
இன்னர் மொங்கோலியாவில் நடந்த இந்தச் சம்பவத்தில்,  முன்னதாக குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக எப்படியாவது தண்டனையை பெற்றுக்கொடுத்து விட வேண்டும் என்று தமக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக புலனாய்வாளர்களும் ஒப்புக்கொண்டிருந்தனர்.-BBC
உங்கள் வருகைக்கு நன்றி...