sireku

பொதுபல சேனா இலங்கையில் மத ரீதியிலான பதற்றத்தை தூண்டுகிறது என ஐ.நாவின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் ரீட்டா இசாக் குற்றம் சுமத்தியுள்ளார்.
சிறுபான்மை இன விவகாரங்களுக்கான மன்றத்தின் 7 ஆவது அமர்வு இன்று புதன்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.
இதற்கு அவர் சமர்ப்பித்த அறிக்கையிலேயே இவ்வாறு  குறிப்பிட்டிருக்கிறார். இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள்,
பொதுபல சேனாவால் கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் முஸ்லிம்களுக்கு எதிராக 350 தாக்குதல்களையும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக 120 தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.
அத்துடன் இந்த அமைப்பு ஏனைய சில அமைப்புகளுடன் இணைந்து தீவிரவாத கொள்கைகளை பரப்புகின்றது. சிங்களவர்களே இன ரீதீயாக உயர்ந்தவர்கள் எனவும் பிரசாரம் செய்கின்றது. மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்றது.
மேலும் பௌத்த சிலைகளை சிறுபான்மை இனத்தவர்கள் சேதமாக்குகின்றனர். மத மாற்றத்தில் ஈடுபடுகின்றனர் போன்ற தகவல்களும் பரப்பப்கடுகின்றன. கடந்த ஜூலை மாதம் ஐ.நாவின் வேறு நிபுணர்களுடன் இணைந்து முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிராக பௌத்த அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் மத மற்றும் இன ரீதீயிலான வன்முறைகளை தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.