மூடப்பட்ட பள்ளிவாசலில் பிரவேசிக்க முயற்சித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்…!!
sireku
கென்ய மொம்பாஸா நகரில் மூடப்பட்ட பள்ளிவாசலொன்றுக்குள் பிரவேசிக்க முயற்சித்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் புதிதாக இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது ஒருவர் பலியாகியுள்ளார்.
மேற்படி, சுபவா பள்ளிவாசலில் இந்த வார ஆரம்பத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் குறைந்தது 4 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த பள்ளிவாசல் கடந்த வியாழக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டி பொலிஸாரால் மூடப்பட்ட 3 பள்ளிவாசல்களில் சுவபாவும் ஒன்றாகும்.
சுவபா பள்ளிவாசலை கடந்த புதன்கிழமை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கிருந்து தாம் கைக்குண்டுகள் பெற்றோல் குண்டுகள் மற்றும் ஏனைய ஆயுதங்களை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
0 Comments