மஸ்ஜித்துல் அக்ஸாவை தாக்குவது கவ்பா வை தாக்குவதற்கு சமமானது ~துருக்கி
sireku
ஏ.அப்துல்லாஹ் : மஸ்ஜித்துல் அக்ஸாவை தாக்குவது கவ்பா வை தாக்குவதற்கு சமமானது , மஸ்ஜித்துல் அக்ஸா மீதான தாக்குதல் மன்னிக்கப்படமுடியாதது என துருக்கிய ஜனாதிபதி அர்துகான் தெரிவித்துள்ளார் . இது தொடர்பில் கருத்துரைத்துள்ள துருக்கி பிரதமர் இஸ்ரேலிய

ஆக்கிரமிப்பில் இருக்கும் மஸ்ஜித்துல் அக்ஸாவை பாதுகாக்க துருக்கி உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார் .
துருக்கியில் இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதமர் அஹமட் டவுடொக்லு “ஹஸரத் உமர் அவர்களால் (இரண்டாவது கலீபா) அல் குதுஸ் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது” என்றும் . “உஸ்மானி சுல்தான்களான யவூஸ் சுல்தான் சலீம் மற்றும் சுலைமானினால் அல் குதுஸ் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. என்றும் கடைசி உஸ்மானி படை வீரரால் அல் குதுஸ் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை எவர் மறந்த போதும் அது உறுதியானது. துருக்கிக்கும் அல் குதுஸிற்கும் தொடர்பு இல்லை இது உங்களின் பிரச்சினை இல்லை என்று எவராலும் கூற முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த பலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷல் ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருப்பதாக துருக்கி பிரதமர் தெரிவித்துள்ளார்
மஸ்ஜித்துல் அக்ஸாவை பாதுகாக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் தயாராக இருப்பதாகவும் “நாம் தேவைப்படும் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டிருக்கி றோம். ஐ.நா. முதற்கொண்டு அல் குதுஸுக்கு உலக ஆதரவை பெறும் முயற்சிகள் ஆரம்பிக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார் .
இஸ்ரேலிய சியோனிச அரசாங்கம் ஜெருசலம் மஸ்ஜித்துல் அக்ஸா மீது பல்வகை தாக்குதல்களை அதிகரித்துள்ளதுடன் அதனை இழுத்து மூடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:lankamuslim
0 Comments