sireku

Cover art
Android Smartphone பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள், மென்பொருள்கள், Games Software போன்ற பல்வேறு வகையான மென்பொருள்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.
                                                   
அந்த வகையில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை அள்ளி (Android apps) வழங்கி வரும் தளங்களில் முதன்மை பெற்றது கூகிள் பிளே ஸ்டோர் தளம். மற்றும் ஏனைய தளங்களும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை வழங்குகிறது.

இதுபோன்ற தளங்களிலிருந்து உங்களுக்கு வேண்டிய அப்ளிகேஷன்களை நீங்கள் டவுன்லோட் செய்யும்பொழுது உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் மெமரி குறைவாக இருந்தால் போதிய இடமில்லை என்ற அறிவிப்பு வரும்.

இதற்கு ஒரே வழி ஏற்கனவே உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள அப்ளிகேஷன்களை மெமரி கார்டுக்கு நகர்த்துவதுதான்.

இயல்பாகவே உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஒரு சில அப்ளிகேஷன்களை மெமரிகார்ட்டுக்கு நகர்த்த முடியாது. என்றாலும் மற்ற அப்ளிகேஷன்களை ஆண்ட்ராய்ட் போனிலிருந்து மெமரிகார்ட்டுக்கு மாற்ற முடியும். 
அதற்குப் பயன்படும் மென்பொருள் அப்ஸ்2எஸ்டி.

உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள் இது. காரணம் இம்மென்பொருள் முக்கியமாக இரண்டு வழிமுறைகளில் உங்களுக்கு பயன்படும். 

பயன் ஒன்று:

ஆண்ட்ராய்ட் போனில் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருக்கும் மென்பொருள் அல்லது அப்ளிகேஷனை உங்களுடைய மெமரிகார்ட்டுக்கு (Memory Card)எளிதாக நகர்த்த முடியும். இதற்கு அந்த அப்ளிகேஷனில் உள்ள மூவபிள் ஆப்சன் பயன்படும். அந்த ஆப்சனைப் பயன்படுத்தும்பொழுது, ஆண்ராய்ட் போனில் உள்ள அப்ளிகேஷன்களில் எந்தெந்த அப்ளிகேஷன்களை மெமரி கார்ட்டுக்கு நகர்த்த முடியும் என்பதைக் காட்டும்.

நீங்கள் உங்கள் மெமரிகார்ட்டுக்கு நகர்த்த வேண்டிய மென்பொருளை தேர்வு செய்து Move செய்துவிடலாம்.

அதேபோல் மெமரிகார்ட்டில் என்னென்ன ஆப்ளிகேஷன்கள் உள்ளன என்பதை ஆன் எஸ் டி கார்ட் (On SD Card) என்ற பக்கத்தில் தெரிந்துகொள்ள முடியும்.

குறிப்பு: குறிப்பிட்ட அப்ளிகேஷன்களை (Phone Only apps) SD Card க்கு நகர்த்த முடியாது. காரணம் அது போன் ஒன்லி ஆப்சனில் (Phone Only) இருக்கும். இவ்வாறு இருக்கும் அப்ளிகேஷன்களை நகர்த்த முயற்சிக்க கூடாது.

பயன் இரண்டு: 

இரண்டாவது முக்கியமான பயன், போன் மெமரியில் உள்ள கேச்சிகளை அகற்றுவது. \
உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் நீங்கள் விரும்பும் அப்ளிகேஷன்களை ஒவ்வொரு முறையும் பயன்படுத்துவீர்கள் அல்லவா? அவ்வாறு பயன்படுத்தும்பொழுது தானாகவே உங்களுடைய ஆண்ட்ராய் போனில் Cache உருவாகும். 

பல நூறு முறை நீங்கள் இவ்வாறு பல்வேறு பட்ட அப்ளிகேஷன்களை பயன்படுத்தும்பொழுது கேட்சியானது உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலின் மெமரியை நிறைத்துவிடும். அவ்வாறு நிறையும்பொழுது தானாகவே ஆண்ட்ராய்ட் மொபைலின் செயல்பாட்டில் வேகம் குறைந்துவிடும். சில சமயம் செயல்படாமல் அப்படியே பாதியில் நின்று விடும். 
மேலும் புதிய அப்ளிகேஷன்களை நிறுவும்பொழுது மெமரியில் போதிய இடமில்லை என்று செய்தியைக் காட்டும்.

இதற்கு காரணம் நீங்கள் பயன்படுத்திய மென்பொருள்கள், அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் (பேஸ்புக், ட்விட்டர்) போன்றவையே. இது அப்ளிகேஷன் கேட்சிகளை, அப்ளிகேஷன் டேட்டாக்களை (application data) ஏற்படுத்தி மெமரியை நிறைத்துவிடும். 

இந்த பிரச்னையும் இம்மென்பொருள் எளிமையாக கையாளுகிறது. அதாவது குறிப்பிட்ட அளவில் உங்களுடைய போன் மெமரியில் கேட்சிகள் (Phone Memory Cache)நிறையும்பொழுது தானாகவே அதை நீக்குகிறது.

அதாவது ஒரு எம்பிக்கு மேல் கேட்சிகள் நிறையும்பொழுது தானாகவே "There are 1.051 Cache Size used by application. Do you want to clear them for getting more space" என நீக்கவா என்று கேட்கும். 

ஓ.கே கொடுத்து அந்த கேட்சிகளை நீக்கிவிடுங்கள். இவ்வாறு நீக்கும்பொழுது தேவையில்லாதவைகள் மெமரியிலிருந்து நீக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனின் வேகம் குறையாமல் இருக்கும்.
மற்ற பயன்கள்: அப்ளிகேஷன்களை மறைப்பது, நண்பர்களுடன் அப்ளிகேஷன்களை பகிரந்துகொள்வது, பேட்ச் அன்இன்ஸ்டால் (Batch Uninstall)செய்வது.

மிகச்சிறந்த பயன்களைக் கொடுக்கும் இந்த மென்பொருளை நீங்கள் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து நிறுவிக்கொள்ளலாம். 
நன்றி;.anbuthil

                                    தரவிறக்கம் செய்யச் சுட்டி: DOWNLOAD


                               சுட்டியை அழுத்தி 5 வினாடி காத்திருங்கள்  பின்பு



என்பதை அழுத்தி தளத்துக்கு செல்லுங்கள்.


*ஆராய்ந்து அறிவோம் facebook page க்கு like போட்டு சிறகுடன் இணைந்துஇருங்கள்




0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...