sireku


‘நொகியா’ பெயரைக் கைவிடுகிறது மைக்குரோஃசொப்ட்தங்களது லூமியா கைத்தொலைபேசிகளில் இருக்கும் நொகியா என்ற பெயரை நீக்க மைக்குரோஃசொப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நொகியா பிரான்ஸின் பேஸ்புக் பக்கத்தில் இந்தத் தகவல் பகிரப்பட்டுள்ளது. மேற்கொண்டு மைக்குரோஃசொப்ட் நிறுவனத்திடமிருந்து இது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு, 7.2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு நொகியாவை மைக்குரோஃசொப்ட் வாங்கியது. ஆனால் நொகியா என்ற பெயரைத் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து ஒப்பந்தம் செய்யப்படவில்லை.
நொகியா தொழில்நுட்ப நிறுவனமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நொகியா என்ற பெயரையும் அந்நிறுவன உரிமையாளர்களே தக்கவைத்துள்ளனர். அந்தப் பெயரை பயன்படுத்துவதற்கான உரிமம் மைக்குரோஃசொப்டிடம் உள்ளது.
புதிதாக பதவியேற்றுள்ள மைக்குரோஃசொப்டின் தலைமை அதிகாரி சத்யா நாதெள்ள, மைக்குரோஃசொப்டின் தொலைபேசி தயாரிப்பை பெரியளவில் கட்டுப்படுத்தியுள்ளார். இதனால் சமீபத்தில் ஆட்குறைப்பு செய்யப்பட்ட 18,000 மைக்குரோஃசொப்ட் ஊழியர்களில் 12,500 ஊழியர்கள் தொலைபேசி தயாரிப்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
(newsfirst.lk)

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...