sireku

எனது காதலியை தொடாதீங்க அமெரிக்க அதிபர் ஒபாமாவை எச்சரித்த வாலிபர் (video)அமெரிக்காவின் சிகாகோ நகரில் மார்டின் லூதர் கிங் சமுதாய மையத்தில் , கவர்னர் தேர்வுகான வாக்கெடுப்பு நடந்தது. இதில் வாக்களித்துக் கொண்டிருந்தார் அதிபர் ஒபாமா, அவர் அருகே ஆயியா கூப்பர் என்ற 20 வயது இளம் பெண் ஒட்டளித்துக் கொண்டிருந்தார்.

ஏதோ சிரித்த முகத்துடன் அவர் இருந்ததை பார்த்த ஒபாமா ஆர்வமிகுதியில் அப்பெண்ணை கட்டிபிடித்து முத்தமிட்டார்.

இதனை அருகே பார்த்துக்கொண்டிருந்த அவரது காதலன் மைக் ஜோன்ஸ் உடனே ஒபாமாவை நேருக்கு நேராக பார்த்து”மிஸ்டர் பிரஸிடென்ட் எனது காதலியை தொடாதீங்க” என எச்சரிப்பது போன்று பேசினார்.
சற்றும் எதிர்பார்க்காத ஒபாமா சகோதர பாசத்துடன் தான் நான் அப்படிநடந்துகொண்டேன் என சமாளித்தார். வாலிபரின் இந்த துணிச்சல் பேச்சு அங்கு பரபரப்பினை ஏற்படுத்தியது

(newsfirst.lk)

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...