sireku

போலா கொள்ளை நோய் தாக்கியவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டிவிட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகின்றது.

இவர்களில் 4,922 பேர் உயிரிழந்துள்ளனர்.
இபோலா வைரஸ் மோசமாகத் தாக்கிய சியேரா லியோன், லைபீரியா மற்றும் கினி ஆகிய மூன்று நாடுகளுக்கு வெளியில் 27 நோயாளிகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த 10 பேரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இந்த மூன்று நாடுகளிலேயே உயிரிழந்துள்ளனர்.
கடைசியாக, மாலியில் இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.
அந்தக் குழந்தையோடு தொடர்புபட்டிருந்த 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.